செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

தஞ்சாவூர் , நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
கும்பகோணம், ஆக 5- கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் கல்லூரியில் பயின்று வருபவர் கமலி வயது 18 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே ஊர் பக்கத்து வீட்டை சேர்ந்த இளையராஜா50 என்பவர் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணிடம் திடீரென்று வீட்டினுள் புகுந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார் அப்பொழுது அந்தப் பெண் சத்தம் போட்டு வெளியில் தள்ளி வீட்டை பூட்டிகொண்டு அப்பெண் உள்ளே இருந்து விட்டார். உடன் 100 நாள் வேலைக்கு சென்றுள்ள தனது பெற்றோருக்கு தகவல் சொல்லவும் பெற்றோர்கள் வந்து பார்க்கும் போது பயந்த நிலையில் இருந்துள்ளார். ஆனால் பெற்றோர்கள் தனது மகளின் படிப்பிற்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் பங்கம் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் வெளியில் சொல்லாமல் இருந்துவிட்டனர். ஆனால் இரண்டு நாள் கழித்து மீண்டும் அந்த முதியவர் அந்த வீட்டிற்கு வந்து உன்னை ரெண்டில் ஒன்று பார்க்காமல் விட மாட்டேன். நடந்ததை வெளியில் சொன்னால் உங்கள் குடும்பத்தை கூண்டோடு கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அச்சம் அடைந்த பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் இளைய ராஜா என்பவர் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி உத்தரவின்பேரில் முதியவர் இளையராஜா கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறார். பாலியல் தொந்தரவு செய்த இளையராஜா திருமணமாகி மனைவி மற்றும் 15 வயதில் பெண் ஒன்றும் ஆண் ஒன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் தெரிவித்திருப்பதாவது, இதுபோன்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தரவேண்டும் என வும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு குற்றச்சம்ப வங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அர விந்த்சாமி மற்றும் வீரையன், பிரபாகரன் ஆகியோர் பாதிக் கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

கல்லூரி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர்
தரங்கம்பாடி, ஆக.5- நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  இந்திய மாணவர் சங்கத்தின் ஐம்பதாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கல்லூரியில் தூய்மை பணி நடை பெற்றது. இப்பணியில் கல்லூரி முதல்வர், நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட தலைவர் ப.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் செ.கபிலன், மாவட்டக்குழு உறுப்பி னர் பா.ராகேஷ் சர்மா, கல்லூரி நிர்வாகி க.கலைச்செல்வன், மணி உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தூய்மை பணியாற்றினர்.

;