மாவட்டங்கள்

img

தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சிகளை வியந்து ரசித்த பிரேசில் நாட்டினர்

அறந்தாங்கி, ஜன.17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பாக பிரேசில் நாட்டில் இருந்து வருகை தந்த ரோட்டரி உறுப்பினர்களை தமிழர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து சிலம்பாட்டம், கோலப் போட்டி, பானை உடைத்தல் உள்பட பல நிகழ்ச்சிகளை பிரேசில் நாட்டினர் வியந்து ரசித்து மகிழ்ந்தனர்.  நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி தலை வர் டாக்டர் விஜய், ரோட்டரி முன்னாள்  தலை வர்கள் விஜயா துரைராஜ், கராத்தே கண்ணை யன், சாத்தையா, பீர்சேக், செயலாளர் வீரையா மற்றும் உறுப்பினர்கள் வள்ளியப்பன், கார்த்திக், வீரமாகாளியப்பன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செலக்சன்  பள்ளி சிலம்பம் பயிற்சியாளர் யோகேஷ்வ ரன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;