செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி போராட்டம்

  திருச்சிராப்பள்ளி, நவ.19- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாலம் ஊராட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய் அன்று அந்தநல்லூர் வட்டார அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வினோத்மணி தலைமை வகித்தார். போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன், கிளை செயலாளர்கள் நாராயண சாமி, செந்தில்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அஜித்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் வேலை வழங்குவதாக உறுதியளிக்கப் பட்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

;