செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சிராப்பள்ளி, நவ.20- திருச்சி கே.கே.நகர் காஜாமலை மெயின் ரோட்டில் வணிகவளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 2 கம்ப்யூட்டர் சர்வீஸ் பார்க்கும் கடை, கறிக்கடை, பால்கடை, கார்டிங்கர் பட்டறை ஆகிய கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில் செவ்வாய் அன்று இரவு கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற உரி மையாளர்கள் புதனன்று காலை கடைகளை திறக்க வந்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கம்ப்யூட்டர் சர்வீஸ் பார்க்கும் கடைகளில் கம்ப்யூட்டர், செல்போன்கள், கறிக்கடையில் ரூ.8 ஆயிரம், டிங்கர் கார் பட்டறையில் கார் உதிரி பாகங்கள், பால் கடையில் பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து அங்கு வந்த போலீசார் கைரேகைகளை சேகரித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;