செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

பளுதூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு நிதியுதவி, ஆதரவு குறைவாக உள்ளது

பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் பேட்டி

சென்னை,நவ. 20 கிரிக்கெட், டென்னிஸ் தவிர இதர விளையாட்டு களுக்கு நிதியுதவி மற்றும் பெரு நிறுவனங்களின் ஆத ரவு குறைவாக உள்ளது என்றும் அனைத்து விளை யாட்டுக்களையும் மேம்படு த்த மத்திய மாநில அரசுக ளும் தனியார் நிறுவனங்க ளும் முன்வரவேண்டும் என்று ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிரபல பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் கேட்டுக் கொண்ண்டார். சென்னை கோபாலபுரம் பாரத ஸ்டேட்வங்கி அருகே விளையாட்டு வீரர்களு க்கான  சர்வதேச சான்றிதழ் பெற்ற எம் ஸ்கொயர் விளை யாட்டு சிகிச்சை மையத்தை தொடங்கிவைத்துப்பேசிய அவர், தேசிய விளை யாட்டுப்போட்டியில் பதக்கம் வென்றாலே ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

பள்ளி அளவில் “விளையாடு இந்தியா இயக்கம்’’ தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது மேலும் விரிவு படுத்த வேண்டும். இதனால் மேலும் பல வீரர்கள் விளை யாட்டுத்துறையில் சாதனை படைப்பார்கள். வேலூர் மாவட்டத்தில் அதிகமான தடகள வீரர்கள் உள்ளனர். இம் மாவட்டத்தில் ஸ்டேடி யம் கட்டவேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் உள்பட பல விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தி வந்தோம். அது நிறை வேறப்போகிறது. கட்டு மானம் துவங்கப்பட்டுள்ளது.  கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுப்போட்டி களுக்கு மட்டும் அதிக ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கிறது. மற்ற விளை யாட்டுகளுக்கும் அரசும் மற்றவர்களும் உதவி செய்ய வேண்டும். பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும் என்றார். விளையாட்டு வீரர்களுக்கான இதுபோன்ற சிகிச்சை மையங்கள் மேலும் பல நகரங்களில் அமைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் ரீதியான தெரபி இருந்தால் அவர்கள் பல காயங்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார். விளையாட்டு வீரர்க ளுக்கு பொதுவாக ஏற்படும் தசைப்பிடிப்பு, தோள்பட்டை வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு எம் ஸ்கொயர் மையத்தில் சிறப்பு சிகிச்சை வழங்கப்படும் என்று அதன் நிறுவனர் மீனா ஓஜா கூறினார். மேலும் சர்வதேச சான்றிதழ்பெற்ற பயிற்சியாளர்கள் இங்கு உள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.

;