செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, நவ.20- நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள எருக்கட்டாஞ்சேரி செந்தமிழ் வித்யாலயா பள்ளியில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் நாகராஜ்  தலைமையில் நடைபெற்றது.  பொறையார் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஜமுனா ராணி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகளையும், சுற்றுப்புற தூய்மையின் அவசியம் குறித்தும் பேசினார். தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

;