விளையாட்டு

img

உலகக்கோப்பை தொடரில் மெக்ரத் சாதனையை முறியடித்த ஸ்டார்க்

உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி மெக்ரத் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
 
இந்த போட்டியில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம்  உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 27 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன் மெக்ராத் 2007-ல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது 12 வருட மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
 

;