விளையாட்டு

img

மீம்ஸ்கள் மூலம் கொண்டாடும் பாக்., ரசிகர்கள்

இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடும் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் இந்திய  அணி தான். இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் தான்  பாகிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் பரிதாபமாக வெளியேறியது. எங்களது அரையிறுதி வாய்ப்பு இந்திய அணியால் தான் பறிபோனது என பாகிஸ்தான் பயிற்சியாளர், வீரர்கள், ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதை, பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ் மூலம் சமூக வலைத்தளத்தை விழாக்கோலமாக்கியுள்ளனர். 

;