விளையாட்டு

img

உலகக்கோப்பையில் இந்திய அணி அவுட் ஏன்? எப்படி? எதற்காக?

12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. 
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள் ஒரே நாளில் நிறைவடைந்துவிடும்.ஆனால் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. கோப்பை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது. உலகக்கோப்பை தொடரில் அசுர பலத்துடன் களமிறங்கிய இந்திய அணி தோல்வியடைந்தது ஜீரணிக்க முடியாத விஷயம் என்றாலும், அதற்கான காரணத்தை பார்ப்போம்...

காரணங்கள் 
1. இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணம் மழை தான். செவ்வாயன்று மழை பெய்யாமல் இருந்திரு ந்தால் நியூஸிலாந்தை சுருட்டி சுறு சுறுப்புடன் வெற்றி இலக்கை (240) அன்றைய தினமே சேசிங் செய்திருக்கும். மழையால் இந்திய அணியின் சேசிங் தொடர்பான மன நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 
2.மான்செஸ்டர் நகரின் சீதோஷ்ண நிலை வானிலையை முன்கூட்டியே கணிக்காமலிருந்தது. 
3. ஆடுகளத்தின் தன்மை உயி ரோட்டமாக இருக்கும், பந்து வீச்சிற்குச் சாதகமாக அமையும் என ஐசிசி முன்கூட்டியே எச்சரித்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் அசமந்த மாக விளையாடியது.
4. மீண்டும் மழை வந்தால் டக் வொர்த் லூயிஸ் விதி அடிப்படையில் ரன் ரேட்டில் சிக்கல் வருமா? என்ற அச்சத்துடன் அதிரடியாக விளையாட முற்பட்டு மிடில் ஆர்டரை விரைவாக இழந்தது.  
5.தோனியை முன்கூட்டியே களமிறக்காமல் 7-வது வீரராக ஆட வைத்தது்.
6. மீண்டும் மழை பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் முதலிட அந்தஸ்துடன் இறுதிக்கு முன்னேறி விடுவோம் என்ற எண்ணத்தில் செருக்காக விளையாடியது.  
    இந்த ஆறு காரணங்கள்தான் இந்திய அணியின் இறுதிப்போட்டிக் கனவைக் கானல் நீராக்கியது. 

;