விளையாட்டு

img

கண்ணீரால் நனைந்த மான்செஸ்டர்

 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும், வேறு எந்த அணிக்கும் வாய்ப்பில்லை என அடித்துச் சொல்லும் அளவிற்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைச் சந்திக்காமல் முதலிட அந்தஸ்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.  ஆனால் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் கோப்பை கனவு மழையால் கானல் நீரைப் போன்று காணாமல் போனது.இந்திய அணியின் அரையிறுதி தோல்வி வீரர்களை விட ரசிகர்களைத் தான் அதிகம் பாதித்தது.  இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினாலும், தோனி - ஜடேஜா ஜோடியின் ஆட்டத்தால் வெற்றி நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே போட்டியை ரசித்தனர். தோனி - ஜடேஜா ஜோடி ஆட்டமிழந்தவுடன் இந்திய அணியின் வெற்றி மீதான கடுகளவு நம்பிக்கையும் கரைந்த நிலையில், இந்திய அணி வெளியேறுவது உறுதி எனக் கதற ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் ஏங்கி ஏங்கி அழுதனர். மான்செஸ்டர் நகரில் மழை பெய்த ஈரப்பதத்தை விட இந்திய ரசிகர்களின் கண்ணீரால் ஏற்பட்ட ஈரப்பதம்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

;