செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

விளையாட்டு

img

பிரபல முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்...

சண்டிகர் 
நாட்டின் முதன்மையான உள்ளூர் கிரிக்கெட் (டெஸ்ட்) தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக (இடது) இருந்தவர் (1970-80களில்) ரஜிந்தர் கோயல். பாட்டியாலா, தெற்கு பஞ்சாப், தில்லி, ஹரியானா அணிகளுக்காக 44 வயது வரை விளையாடி 750-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பல்வேறு வகை உள்ளூர் தொடர்களில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாடாதவர். 1974-75இல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை (பெஞ்சில் அமரவைக்கப்பட்டார்). எனினும் ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை (637) வீழ்த்திய நபர் என்ற சாதனையை வைத்துள்ள இவர் தனது 77 வயதில் காலமானார். 

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவியும், நிதின் கோயல் என்ற மகனும் உள்ளனர். நிதின் கோயலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

;