politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா :- தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தைக் கலக்கச் செய்ய வந்துள்ளோம்.
ச.சா - இவர்கள் சொல்லும் தேசிய நீரோட்டம்குறது ஒரே மொழி, ஒரே மதம்..!!
*********
தமிழக அமைச்சர் உதயகுமார் :- பேரிடர்களால் பாதிக்கப்படும் சூழலில் தமிழகம்.
ச.சா - மத்திய, மாநில ஆட்சியாளர்களே பேரிடராகத்தானே மாறியிருக்கீங்க..??
*********
செய்தி :- நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.
ச.சா - மோடியோட நடிப்பு பிடிச்சுப் போயிருச்சோ..??
*********
சாமியார் ஜக்கி வாசுதேவ் :- விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும்.
ச.சா - கிடைச்சபிறகுதான் விவசாயிகள் பட்டியல்ல முதல் பேரு உங்க பேருன்னு தெரிய வரும்..!!

;