politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் பாண்டியராஜன்: விளம்பரம் தேட வேண்டுமென்றால் பிரதமருக்கு வெறும் ஐந்து நிமிடம் போதுமே?
ச.சா - என்ன பண்றது.. நடிப்பு கனகச்சிதமா இருக்கனும்னு நெனக்குற பிரதமராச்சே..??
*****
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் :- நாங்குநேரியில் இடைத்தேர்தல் வரக் காரணமாயிருந்த காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
ச.சா - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்ல நின்ன ஜெயலலிதா இருந்திருந்தா, இப்படிப் பேசிருப்பாரா..??
*****
செய்தி:- இந்தியாவில் 50 சதவிகித வறுமை ஒழிப்பு.
ச.சா - பட்டினில 102 இடத்துக்கு சரிஞ்சுருச்சுனு வந்த புள்ளிவிபரத்த மறைக்க பழைய செய்திய எடுத்துப் போடுறாங்களோ..??
*****
தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் :- வலுவான நிலையில் பொருளாதாரம்.
ச.சா- இவரும் சினிமா தியேட்டருக்குப் போயிருப்பாரோ..??

;