politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- வரி நிலுவையான 4 ஆயிரத்து 845 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ச.சா - ஏதோ பத்து ரூபாயைக் கேக்குற மாதிரி கேக்குறீங்களே..??
*****
செய்தி :- பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்க மத்திய அரசு திட்டம்.
ச.சா - திவாலாக்கிட்டுதான் விடுவாங்களோ..??
*****
சிவசேனா :- அடுத்த மகாராஷ்டிரா முதல்வர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்.
ச.சா - சண்டையை ஆரம்பிச்சுட்டாங்களே..?,
*****
செய்தி :- தெலுங்குதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
ச.சா - ஜெய் ஸ்ரீராம்னு கோஷம் போடணும்.. கட்சில சேர அதுதான் தகுதி...!!

;