politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- நமது கூட்டாட்சி அமைப்பில் ஆளுநர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
ச.சா - கூட்டாட்சினா நீங்களும், அமித்ஷாவும் சேர்ந்து செய்யுற ஜனநாயகப் படுகொலைகளா..?
******************
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- விவசாயிகளின் விடாமுயற்சி குணம் நமக்கு இருக்க வேண்டும்.
ச.சா - நீங்க எவ்வளவு தொல்லை குடுத்தாலும் விவசாயிங்க சகிச்சுக்குறத சொல்றாரோ..??
******************
பாஜக எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி :- நடிகர்களின் சினிமா வசனத்தைக் கேட்டு அலுத்து விட்டது.
ச.சா - அதனாலதான் உங்க கட்சிக்காரங்க காமெடி பண்ணிட்டு இருக்காங்களா..??
******************
செய்தி :- நடப்பாண்டில் இராக்கிலிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி.
ச.சா - இந்தியா யார்கிட்ட எண்ணெய் வாங்கணும்னு அமெரிக்காதான முடிவு பண்ணுது..!!

;