science

img

சந்திரயன் 2 அடுத்து 2020-ல் சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்!

சந்திரயான்-2 விண்கலத்தை தொடர்ந்து, 2020-ல் சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை நேற்று இஸ்ரோ நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதை தொடர்ந்து, வரும் 2020-ல் ஆதித்யா - எல்.1 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இஸ்ரோ தலைவர் சிவன், இந்த ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் வெளிப்பரப்பான கொரோனா லேயர் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இது பூமியின் பருவநிலை மாறுபாட்டை தெரிந்துகொள்ள உதவும். மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களை பற்றிய ஆராய்ச்சிகளும் இந்த விண்கலம் மேற்கொள்ளும். இந்த விண்கலத்தை அடுத்த ஆண்டு முதல் 6 மாதத்துக்குள் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று வெள்ளி கிரகத்தை ஆராயவும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார்.
 

;