science

img

ஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 2,268 கிலோ ஆகும். ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான சோதனை பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எச்.எல்.வி என்.கே3 மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த திட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 

;