science

img

விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் முயற்சியில் இணைந்தது நாசா


விக்ரம் லேண்டருடன் தொடர்பை  ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா ஆய்வாளர்களும் இணைந்துள்ளனர்.
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி மெல்ல மெல்ல தரை இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது 
ஆனால், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பது தெரிய வந்தது.  அந்தக் காட்சி அடங்கிய தெர்மல் படம் ஒன்றை, நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்து கொண்டிருக்கிற சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் பிடித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இஸ்ரோவின் ஒப்புதலை பெற்று விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னியா,ஸ்பெயின், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களில் உள்ள ஆய்வு நிலையங்களில் இருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற செய்தியை நாசா தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது. நாசாவுக்கு சொந்தமான லேசர் ரிப்ளெக்டர் என்ற கருவி விக்ரமில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஹலோ செய்திக்கு  விக்ரம் லேட்ண்டரில் இருந்த பதில் வருமா என  நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
 

;