tamilnadu

img

மக்கள் சேவையே கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு துவக்கவிழாவில் என்.சங்கரய்யா முழக்கம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு துவக்க விழா நிகழ்வில், முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா செங்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், அ.பாக்கியம், க.உதயகுமார், வெ.ராஜசேகரன், ஆர்.வேல்முருகன் மற்றும் தே.லெட்சுமணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, அக். 17 - மக்களுக்கு சேவை செய்வது என்பதைத் தவிர கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேறு லட்சியம் கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா வியாழனன்று (அக்.17) தொடங்கியது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் என்.சங்கரய்யா செங்கொடி யை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஏகாதிபத்திய சக்திகள் மிரளும் வகையில் மார்க்சியத்தை மக்கள் சமூகம் மீண்டும் வாசிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஐரோப்பி யத் தொழிலாளி வர்க்கம் மார்க்சியத்தை ஆழ்ந்து  படிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இளந்தலைமுறை ஆழ்ந்து கற்க வேண்டும். முதலாளித்துவத்தால், ஏகாதிபத்தியத்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. சோசலி சம் சார்ந்த அமைப்புகளால் மட்டுமே பிரச்சனை களுக்கு தீர்வு காண முடியும் என்பதை  உணர்ந்து சமூகம்  மார்க்சியத்தை கற்கத் தொடங்கியுள்ளது. 

வீழும் முதலாளித்துவ முறை
நிலப்பிரபுத்துவத்தை அன்றைக்கு முத லாளித்துவம் வீழ்த்தியது. அந்த முதலாளித்துவத் தால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடிய வில்லை. முதலாளித்துவ பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சோசலிச அமைப்பு உருவாகும் காலகட்டத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சி உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிச இயக்கத்தின் சாதனைகள், தியாகங்கள், படிப்பினைகளை பிரச்சாரம் செய்வோம். நாடு முழுவதும் வலுவான கட்சியைக் கட்டுவோம். கம்யூனிச இயக்கம் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்றி ணைத்து; பிற்போக்குத்தனமான, வலதுசாரி, எதேச்சதிகார, வகுப்புவாத சக்திகளை எதிர்த்து  மாபெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக் கிறது. இடதுசாரிகளின் அந்தப் போராட்டம் தொடரும்.

தீக்கதிர்
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தீக்கதிர் பத்திரிகையை கொண்டு செல்லுங் கள். கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் தீக்கதிர் வாங்கி படித்து, முழுமை யாக உள்வாங்கிக் கொண்டு, குக்கிராமங்களி லும், மக்கள் திரள் கூடும் இடங்களிலும் பிரச்சாரம் செய்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் மகத்தான இடதுசாரி ஜனநாயக இயக்கம் உருவாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகளில் திரண்டுள்ள கோடிக் கணக்கான மக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் பாதையில் திரட்ட வேண்டும். அப்போது தான் மார்க்சிஸ்ட் கட்சி பலம் பொருந்திய தாக மாறும். சிங்காரச் சென்னையை சிங்கார வேலரின் சென்னையாக மாற்ற முடியும்.

வலிமையான இடதுசாரி இயக்கம்
1936ம் ஆண்டு 8 உறுப்பினர்களோடு தமிழ கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு,  நெல்லை சதி வழக்கு என அடுக்கடுக்காக சந்தித்துத்தான், புடம்போட்டு எடுக்கப் பட்டவர்கள்தான் அமைப்பைக் கட்டி வளர்த்த னர். சிபிஎம், சிபிஐ கட்சிகள் நெருக்கமாக செயல்பட்டு இதர இடதுசாரிக் கட்சிகளை ஒன்று திரட்டி வலிமையான இடதுசாரி இயக்கத்தை கட்டமைப்போம். கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் கம்யூனிச இயக்கம் வலுவான தளத்தை கொண்டுள்ளன. இதைத் தகர்க்க பெருமுதலாளிகள் முயற்சிக்கிறார்கள். அதனை முறியடித்து நமது இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அரசு சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத்தொடர்ந்து, குடும்பம் குடும்பமாகச் சென்று பேசி முன்னேறி வருகிறார்கள். தமிழகத்தில், இடதுசாரி, ஜன நாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங் கிணைத்து, மதவாத சக்திகளுடன் செல்லக் கூடியவர்களை தோற்கடித்துள்ளோம்.

தோழர்களுக்கு அழைப்பு
சில தோழர்கள் சொந்த காரணங்களுக்காக, மனஸ்தாபம் காரணமாக கட்சியை விட்டு விலகி நிற்கின்றனர். உங்களுக்கும் மார்க்சுக்கும் சண்டையில்லை. நீங்கள் மார்க்சோடு ஒன்றி யிருக்கிறீர்கள். சில்லரை விஷயங்களுக்காக ஒதுங்கியிருப்பவர்கள் மீண்டும் வாருங்கள். மார்க்சிஸ்ட் கட்சி கொடியின் கீழ் மக்கள் இயக்கத்தில் பணியாற்றுங்கள். மகத்தான இயக்கத்தை கட்டுங்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரட்டுக!
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நாம் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நாடு முழுவதும் உள்ள மக்க ளை, தொழிலாளர்களை திரட்டுகிற கட்சி. சோச லிசத்திற்காக போராடுபவர்கள். எனவே, தமிழ கத்தில் புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்களை திரட்ட வேண்டும். அவர்கள் மூலம் அவரவர் மாநிலங்களில் கட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

சிவப்பு ஆடை, சிவப்புப் பானை
நமது மாநாடு, இயக்கங்களுக்கு தோழர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிவப்பு ஆடையணிவித்து, சிவப்பு பானையில் அரிசி சோற்றை எடுத்துக் கொண்டு வரு வார்கள். அந்த நிலை தொடர வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்பதைத் தவிர கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேறு லட்சியம் கிடையாது. மக்கள் சேவைக்காகத் தான் கம்யூ னிஸ்ட் கட்சி இயங்குகிறது. இந்த நோக்கம் நிறைவேற ஏகாதிபத்திய, முதலா ளித்துவ உலகில் அதை வீழ்த்தி சோசலிசம் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஆசியக் கண்டத்திலும், இந்தியாவிலும் செங்கொடியின் பக்கம் மக்கள் திரள வேண்டும். சீனா வும், இந்தியாவும் ஆசியக் கண்டத்தின் மாபெரும் நாடுகள். உலக சரித்திரத்தை மாற்றியமைக்க கூடியவை. மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து ஆசியாவின் நூற்றாண்டாக மாறும் காலக்கட்டத்தில் வாழ்கிறோம். அதற்கேற்ப தமிழகத்தை இடதுசாரி ஜனநாயக சக்திகளின் கோட்டையாக மாற்றுவோம். உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்றார் மார்க்ஸ். இந்திய மக்களின் ஒற்றுமையை, விடுதலையை பாதுகாப்போம். மொழிவழி மாநிலங்களை பாதுகாப்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சிமொழியாக்கு வோம். தொழிலாளி - விவசாயியின் வாழ்க்கை யை முன்னேற்றுவோம். தமிழகத்தையும் மேற்குவங்கம், கேர ளம், திரிபுராவை போன்று கம்யூனிச இயக்கத்தின் கோட்டை யாக மாற்றுவோம். புரட்சி ஓங்குக! இவ்வாறு என்.சங்கரய்யா பேசினார். விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் கே.வரதராசன், டி.கே. ரங்கராஜன், பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 

;