tamilnadu

img

5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி

சென்னை, மே 15-மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.7-வது கட்ட தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வருகிற 19 ஆம் தேதி மேலும் 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.இதற்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விவிபாட் என்று சொல்லக் கூடிய ஒப்புகை சீட்டு முறை அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபாட்டில் பதிவான ஓட்டுகளும் சமமாக இருக்க வேண்டும். இதில் வேறுபாடு ஏற்பட்டால் வாக்குப் பதிவில் குளறுபடி ஏற்பட்டதாக கருதப்படும்.எனவே வாக்குப்பதிவு எந்திரம்-விவிபாட் எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகள் ஒரே எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை கருத் தில் கொண்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புதனன்று(மே15) நடந்தது. இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்கா ஆகியோர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர் தல் துணை ஆணையர்கள் பாலாஜி, ராஜதுரை, கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, இயக்குநர் நிகில்குமார், திலீப் சர்மா மற்றும் புதுச்சேரி, குஜராத், லட்சத் தீவுகள் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 38 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், 18 தொகுதி இடைத்தேர் தல்களை நடத்திய தேர்தல் அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற் பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். வாக்கு எண்ணும் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் மின்னணு எந்திரங்களையும், விவிபாட் எந்திரங்களையும் முறையாக கையாள வேண் டும். விவிபாட் எந்திரத்தில் வித்தியாசம் ஏற்பட்டால் பின்பற்ற வேண் டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு துணை ஆணையர்கள் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

;