tamilnadu

img

டெல்டா பகுதியில் ஜூன் 1-ல் ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை:
முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்களே ஒப்பந்த பணியை எடுத்துள்ளதால் விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஜூன் 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவது என அனைத்துமே காலதாமதமாக துவங்கப்பட்டது.ஜனவரி 28 ஆம் தேதியே மேட்டூர் அணை மூடப்படும் நிலையில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தம் மே 20 ஆம்தேதி தான் விடப்பட்டது. ஜூன் 12 ஆம்  தேதி அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் தூர்வாரும் பணி என்பது பெயரளவுக்கே நடைபெறும் என்பது வெள்ளிடைமலை.தூர்வாரும் பணிக்கான ஒப்பந்ததாரர்களாக அமைச்சர்கள், முன் னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் எடுத்துள் ளனர்.
பணிகளை கண்காணிப் பதற்கு மாவட்டத்திற்கொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருந்தாலும் அதிகாரிகளால் அமைச் சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் செல்வாக்குமிக்க நபர்களை மீறி அவர்களால் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ள முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டு கிறோம்.ஒதுக்கப்பட்ட வேலையின் அளவு, நிதி ஒதுக்கீடு, பணி முடிக்க வேண்டிய காலம் ஒப்பந்ததாரரின் பெயர் போன்ற விபரங்கள் பணியிடத்தில் விளம்பர பலகையின் மூலம் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படிப்பட்ட எந்த விபரமும் பொது மக்களுக்கு தெரிவிக்காமல் வெளிப்படை தன்மையின்றி மூடி மறைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.\

இதனால் தான் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கோட்ட அளவில் விவசாயிகள் கண் காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.ஆனால் தமிழக அரசு, மோசடி முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் களுக்கு ஆதரவாக இத்தகைய குழுக்களை அமைக்க மறுத்து வருவது கண்டனத்திற்குரியது.தூர்வாரும் பணிகள் முழுமையாகவும் தீர்மானித்த திட்ட மதிப் பீட்டின் அடிப்படையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் விவசாயிகளின் கண்காணிப்பு குழுக்களை அமைக்கக் கோரியும் ஜூன் 1ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெறும்.இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

;