tamilnadu

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிடு: மு.க.ஸ்டாலின்

 வேலூர், ஜூன் 8- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்திலும் தாலுக்கா அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சோளிங்கர் கிளை சங்கம் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஆதித்தன் தலைமை  தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் வரவேற்றார்.  இதில் துணைத் தலைவர்கள் துளசிராமன்,ஜெயந்தி, செயலாளர்கள் பால கிருஷ்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், ஸ்டா லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி வட்டாரக் கல்வி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆற்காடு வட்டாரத் தலை வர் சடையாண்டி தலைமை வகித்தார். இதில் செயலாளர் எம்.ஆர்.கோவிந்தராஜன், பொருளாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் எம்.குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர்களை உபரி ஆசிரியர்கள் என்று கூறி, அங்கன்  வாடிகளில் எல்கேஜி, மற்றும் யுகேஜி ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை  அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடிகளில் முன்பருவ ஆசிரியர் பயிற்சி  பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், 2010க்குப் பிறகு ஆசிரியர்க ளாக நியமனம் செய்யப்பட்டு, 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரி யர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துப் பணி நிரந்தரம் செய்ய  வேண்டும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணி யத்தின் பதவி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன

;