tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரில்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

;