tamilnadu

img

உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 4- “உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று (ஜூலை 4) கேள்வி நேரத்திற்கு பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசு கையில், 5 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் தமிழ் இடம் பெறாதது ஏமாற்ற மளிக்கிறது என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,  முதற் கட்டமாக 6 மொழி களில் வெளியிடப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. வேறு மொழிகளில் வெளியிட மாட்டோம் என்று கூறவில்லை. எனவே, விரை வில் தமிழில் தீர்ப்புகளை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி யளித்தார்.  உச்சநீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி யாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங் களில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட வில்லை. தற்போது, மத்திய அரசு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் அலுவல் மொழியாக்கப்படும் என்று கூறியிருக்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்த பிரச்சனை யில் ஒரே கருத்தில் இருப்பதால் தற்போதைக்கு தீர்மானம் தேவையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அமைச்சர் கூறினார்.

;