tamilnadu

இலங்கை அகதிகளுக்கு... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

இருக்கிறதா? நாடு முழுவதும் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் போய்விட்டது என்பதை மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க நாடு திக்குமுக்காடுகிறது. இதற்கு நாட்டு மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தான் தேசிய குடியுரிமை சட்ட திருத்தம், காஷ்மீரில் 370வதுசிறப்பு பிரிவு நீக்கம் என்று மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வெங்காயம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பது தான் உண்மை. ஜி.எஸ்.டி வரி வசூலில் தேக்கம் ஏற்பட்டதால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கீட்டை நாங்கள் கொடுக்க முடியாது என்று சொல்கிறது பாஜக அரசு.நாட்டில் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி இல்லாததால் சந்தை சுருங்குகிறது.எனவே ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்ய முடியவில்லை. இன்னும் பல பொருட்களின் மீது வரியை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதனால் இப்போது இருக்கிற நெருக்கடி இன்னும்கூடுதலாக வாய்ப்புள்ளது என்றார். இந்தபேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

;