tamilnadu

img

பெரம்பலூர் அஸ்வின்ஸ் நிறுவன குடும்ப விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கல்

பெரம்பலூர், ஜூன் 24- பெரம்பலூரில் அஸ்வின்ஸ் நிறுவன குடும்ப விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.  பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் திருச்சி, சென்னை, விழுப்புரம், நாமக்கல், ஆத்தூர், கரூர். துறையூர், அரியலூர், சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் தொழிலாளர்களை கவுரவிக்கும் விதமாகவும், அவர் களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காகவும் “அஸ்வின்ஸ் குடும்ப விழா” நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான அஸ்வின்ஸ் குடும்ப விழா பெரம் பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன கூட்டரங்கில் சனியன்று நடந்தது. விழா விற்கு நிர்வாக இயக்குநர் வரதராஜ், இயக்குநர்கள் செல்வக்குமாரி, சிபி,  நிஷா ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழும தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அஸ்வின்ஸ் குழுமத் தலை வர் கணேசன் தலைமை வகித்து அஸ்வின்ஸ் நிறுவன தொழிலாளர் களின் குழந்தைகளில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 45 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும், 12ம் வகுப்பில் சிறப் பிடம் பெற்ற 60 பேருக்கு தலா ரூ.10 ஆயி ரமும், இதை தவிர 250க்கும் மேற்பட் டோருக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினார். தொடர்ந்து சிறந்த தொழிலாளர் களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.  விழாவில் சின்னத்திரை பிரபலங் களின் மேஜிக், மிமிக்கிரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெரம்பலூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அஸ்வின்ஸ் தொழிலாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அஸ்வின்ஸ்  மேலாளர்கள் அசோக், சூரிவெங்க டேசன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் கிரிஜா, சரவணன், கபிலன், சுரேஷ், சசி ஆகியோர் செய்திருந்தனர்.

;