headlines

img

முற்றாக நிராகரிப்பது ஒன்றே சிறந்த வழி

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன. புதிய கல்விக் கொள்கை யில் இடம் பெற்றுள்ள ஆபத்தான அம்சங்களை எதிர்க்கட்சிகள் விரிவாக பட்டியலிட்டு அரசுக்கு கொடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, கல்வியில் வேத கலாச்சாரத்தை திணிப்பது, இடஒதுக்கீடு குறித்து எதுவும் கூறாமல் சமூக நீதியை புறக் கணிப்பது, மதிய உணவு திட்டத்தை மாற்றிய மைப்பது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வியை திணிக்க முயல்வது, அனைத்து நிலை யிலும் அகில இந்திய நுழைவு தேர்வு என மாற்று வது, மாணவர்கள் தாங்க முடியாத அளவுக்கு பொதுத் தேர்வுகளை சுமத்துவது, பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை பறிப்பது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது என புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை சுட்டிக்காட்டி யுள்ளதோடு இதை முற்றாக தமிழக அரசு நிரா கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி யுள்ளன.

இந்தநிலையில் திங்களன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில், மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதியில்லை என்றும், மும்மொ ழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார். அமைச் சரவையின் இந்த முடிவு நல்லது என்றாலும் மும்மொழி திணிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டது அல்ல புதிய கல்விக்கொள்கை.

மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், எந்தவொரு மொழியையும் திணிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி யுள்ளார். ஆனால் இது வெறும் ஏமாற்று வித்தையே. 

புதிய கல்விக்கொள்கை முழுவதும் சமஸ் கிருதமயமாக்கலையே நோக்கமாக கொண்டுள் ளது. இடைக்கால ஏற்பாடாகவே இந்தி திணிப்பு உள்ளது.  எனவே இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை முற்றாக மத்திய பட்டியலுக்கு மாற்றும் வகையி லேயே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் கசப்பான அனுபவம் தமிழகத்திற்கு உண்டு. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிற, குலக்கல்வியை திணிக்கிற, இடைநிற்றலை அதிகப்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கையை முற்றாக கைவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக தமிழகம் ஒன்றுபட்டு நின்றது போல, அனைத்து வகையிலும் ஆபத்தான புதிய கல்விக்கொள்கையை பின்னுக்கு தள்ளுவதி லும் ஒன்றுபட வேண்டும்.

;