headlines

img

நீட் நீளும் அநீதி

 மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளை நிராகரித்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு கூட அனுப்பாமல் இந்த சட்ட முன் வரைவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு கூட இந்த தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. அல்லது மத்திய அரசு அவ்வாறு தெரிவித்திருந்த போதும் அதை மக்களிடம் தெரிவிக்காமல் மாநில அதிமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப் படும் என்று தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை தமிழக மக்களிடம் விளக்க வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு உண்டு.  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கள் குடியரசு தலைவர் இந்த சட்ட முன்வரைவு களை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளனர். நீதிபதிகள் குறுக்கிட்டு விளக்கம் கேட்ட போது நிறுத்தி வைக்கப்படவில்லை. ஒரேயடி யாக நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வு தமிழக கிராமப்புற மாணவர்களுக் கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கும், மாநில கல்வித் திட்டத்தின் கீழும் தாய்மொழி வழியிலும் படித்த மாணவர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கிறது என்பது ஒருபுற மிருக்க, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட இரு சட்டமுன்வரைவுகளை மத்திய பாஜக கூட்டணி அரசு அணுகும் விதம் மாநில உரிமை களை காலில் போட்டு மிதிப்பதாக உள்ளது.  மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி யேற்றவுடன் ஒரே நாடு, ஒரே திட்டம் என்று கூச்ச லிடத் துவங்கியுள்ளது. ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்று கூறியவர்கள் மத்திய பட்ஜெட்டில் ஒரே மின்சாரம் என்றும் சொல்லத் துவங்கிவிட்ட னர். இலவச மின்சாரம், இலவச அரிசி போன்ற திட்டங்களை ஒரேடியாக ஒழித்துக் கட்டுவ தற்கான முன்னேற்பாடுதான் இது.  உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படாது என்று முதலில் கூறி, பிறகு மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று கூறி னார்கள். தற்போது மத்திய அரசு சில குறிப்பிட்ட கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழி சொல்லித் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  நீட் தேர்வு விசயத்தில் வன்மத்துடனும், வஞ்ச கத்துடனும் மோடி அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்த போதும், அதை தட்டிக் கேட்கும் தைரி யம் மாநில அதிமுக அரசுக்கு இல்லை. மத்திய அரசின் செயலை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர்க ளது அடிமைத்தனத்தால் தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

;