india

img

காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறல் வந்து விட்டால்..?

புதுதில்லி: 
காற்று மாசுபாடு அபாய கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில், தில்லியில் வசிப்பவர்கள், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்கோளாறுகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள சுவாசக்கவசம் (மாஸ்க்) அணிவது அதிகரித்திருக்கிறது. எங்கு சென்றாலும் மாஸ்க் உடனேயே சென்று வருகின்றனர். இது அவர்களுக்கு அவசியமும் கூட.ஆனால், தில்லியை ஒட்டியுள்ள ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில கோயில்களில் சாமிசிலைகளுக்கும் மாஸ்க் அணிவித்து, பக்தர்கள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளனர்.காற்று, புகை மாசுபாடு, கடவுளையும் பாதிக்கத்தானே செய்யும் என்று கருதிய சில பக்தர்கள்உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் சிகாராவில் உள்ள சிவன், துர்கா, காளி, சாய்பாபா உள்ளிட்ட சிலைகளுக்கு சுவாசக் கவசம் அணிவித்துள்ளனர்.“சிலைகள் அனைத்துக்கும் உயிர் இருப்பதாக நம்புகிறோம். எனவே, அந்த உயிர்களுக்கு காற்று மாசுபாட்டால் வலி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக சுவாசக் கவசம் அணிவித்துள் ளோம்” என்று துர்கா கோயில் தலைமை அர்ச்சகர் ஹரிஸ் மிஸ்ராஎன்பவர் கூறியுள்ளார்.வட மாநிலங்களில், கோடைக் காலத்தின்போது, சாமி சிலைகளுக்கு வியர்க்கும் என்று ஏர் கண்டிசன் வசதி செய்வதும், குளிர்காலங்களில் சிலைகள் நடுங்கும் என்று அவற்றுக்கு ஷொட்டர் அணிவிப்பதும் ஏற்கெனவே இருப்பதுதான். தற்போது அதில் சுவாசக் கவசமும் இணைந்துள்ளது.

 

;