வியாழன், அக்டோபர் 22, 2020

அரசியல்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அரசாங்கத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து மிகப்பெரிய அளவில் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சுகாதார அமைச்சர் பேச்சுமூச்சின்றி இருக்கிறார். கோவிட் 19 கட்டுப்படுத்துவதற் கான உயர்மட்டக் குழு 18 நாட்கள் கழித்து கூடியிருக்கிறது. இது மட்டுமின்றி மறுபுறத்தில், பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. திட்டமிடாத ஊரடங்கு, இந்திய தேசத்தில் ஒரு முழு வீச்சிலான பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தன்னிச்சையான, திட்டமிடாத ஊரடங்குகளின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத ஒரு வீழ்ச்சிக்குள் இன்னும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக்  கடுமையான சூழலில் அரசாங்கம் தனது கைகளைக் கழுவுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுமாறு துயரத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் பின்னணியில் மக்களை பாதுகாக்க வேண்டிய மொத்த சுமையும் திட்டவட்டமான முறையில் மாநிலங்களின் தலைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கு மத்திய அரசு எந்தவிதமான ஆதார வளங்களையும் அளிக்கத் தயாராக இல்லை. நியாயமாக அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளையும் பாக்கிகளையும் கூட வழங்கத் தயாராக இல்லை. இதுதான் ஆட்சி நிர்வாகம் தொடர்பான மோடி மாடல் போலும். கோடிக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கும் பல்வேறு மாநகரங்களிலிருந்து வேறு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.7500 நிவாரணப் பணத்தை மத்திய அரசு நேரடியாக வழங்க  ஏன் மறுக்கிறது? கிடங்குகளில் யாருக்காக உணவு தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன? நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 10கிலோ வீதம் ஏன் ஏழைகளுக்கு இந்த உணவு தானியங்களை அளிக்க மறுக்கிறீர்கள்?  இந்திய அரசு தனது மக்களுக்கு நேர்மையானதாக இல்லை. வரலாறு காணாத ஒரு துயரத்தின் போது கூட மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையை செய்ய மறுக்கிறது.

;