திங்கள், அக்டோபர் 26, 2020

அறிவியல்

img

இன்று இரவு நிகழ்கிறது பெனம்ரால் சந்திர கிரகணம்

பெனம்ரால் சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை நிகழவுள்ளது.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று நிகழவிற்கும் சந்திர கிரகணத்தின் போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் முழுமை அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரால் (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரியும். எனவே இதனை ஸ்ட்ராபெர்ரி மூன் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இன்று சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். முழு சந்திர கிரகணத்தை நாளிரவு 12:54 மணிக்கு பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;