செவ்வாய், அக்டோபர் 20, 2020

உலகம்

img

உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 227 கோடி நிதி... சீனா வழங்குகிறது 

ஜெனீவா
உலகில் கொரோனா வைரஸ் தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐ.நா.சபையின் துணை நிறுவனமான இந்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி தான் கொரோனா தடுப்பு, ஊரடங்கு போன்றவைகள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனம் கம்பீரமாகச் செயல்படுவதற்கு முக்கிய நிதி ஆதாரங்களை அமெரிக்கா தான் அளித்து வந்தது. தற்போது கொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா நிதியை நிறுத்தியுள்ள நிலையில், சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆறுதல் அளித்து வருகிறது. ஏற்கெனவே ரூ.151 கோடி  (20 மில்லியன் டாலர்) வழங்கியிருந்த சீனா, மேலும் 227 கோடி ரூபாய் (30 மில்லியன் டாலர்)  வழங்குவதாக அறிவித்துள்ளது. நாங்கள் வழங்கப்படும் நிதியானது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;