சனி, செப்டம்பர் 26, 2020

தமிழகம்

img

மத்திய- மாநில அரசை கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தினம்- ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜூன்.16- தஞ்சாவூர் நகரத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரா.புண்ணியமூர்த்தி, சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி மற்றும் நகரக்குழு கலந்து கொண்டனர்.  பூக்காரத் தெரு, பள்ளி அக்ரஹாரம், கரந்தை, கீழவா சல், கலைஞர் நகர், பாத்திமா நகர், வடக்கு வாசல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அந்தந்த பகுதி கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

மதுக்கூர்

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.காசிநாதன், ஆர்.கலைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.லெட்சுமணன், எம்.அய்யநாதன், எஸ்.சுப்பிரமணியன், எல்.சின்னப்பொன்னு, மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் கலாவதி மற்றும் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

திருவையாறு 

திருவையாறில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஆர்.பிரதீப் ராஜ்குமார், துரை. ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

திருவோணம் 

திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் பி.கோ விந்தராஜூ தலைமை வகித்தார். விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, விதொச ஒன்றியத் தலைவர் பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அம்மாபேட்டை 

அம்மாபேட்டை 4 ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, நகரச்செயலாளர் வி.ரவி, கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அரு கில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு எம்.செல்வம், விவசாய சங்க மாவட்டக்குழு ஏ. கோவிந்தசாமி, முருக.சரவணன், ஜீவானந்தம், குட்டி என்ற  சு.சுந்தரபாண்டியன், மோரீஸ் அண்ணாதுரை, எம்.ஆர்.செந்தில்குமார், ரமேஷ், சக்திவேல், ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஒரத்தநாடு 

ஒரத்தநாடு கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராசு, பாஸ்கர், மோகன் தாஸ், சிதம்பரம், நகரச் செயலாளர் வசந்தகுமார், சௌந் தர்ராஜன், விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பூதலூர்

பூதலூர் தெற்கு ஒன்றியம் பூதலூர், செங்கிப்பட்டி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, அயோத்திப்பட்டி உள்ளிட்ட 19 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், நிர்வாகிகள் விஜயகுமார், முகமது சுல்தான், தமிழ ரசன், தமிழ்கொடி, எல்.ராஜாங்கம், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கல்லணை

பூதலூர் வடக்கு ஒன்றியம் கல்லணை - தோகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மெய்யழகன், சம்சுதீன், முருகேசன், செபஸ்தியார், கலைச்செல்வி, பாஸ்கரன், உதயகுமார், கிளைச் செய லாளர்கள் முருகேசன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கரூர்

கரூர் மாவட்டத்தில் கரூர்நகரம், கரூர் ஓன்றியம், க.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராய புரம், கடவூர், அரவக்குறிச்சி, தாந்தோனி ஒன்றியத்தி ற்குட்பட்ட கிளை பகுதிகளில்  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  சிபிஎம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கரூர் நகரம் 

 சுங்ககேட் பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஹோச்சுமின், ஜீவானந்தம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கட்சியின் கரூர் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் வெங்கமேடு கடைவீதியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். ராயனூர் கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிளை  செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  ராஜா, கிளை நிர்வாகிகள்  கணேசன்,  ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் ஒன்றியம்

கரூர் ஒன்றியக் குழு சார்பில் கட்சியின் ஒன்றிய முழு அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய  செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை ஒன்றியம்

குளித்தலை ஒன்றிய குழு சார்பில் நங்கவரம் பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கரநாரயணன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு, மாவட்ட குழு உறுப்பி னர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர். 

 தோகமலை  ஒன்றியம் 

 தோகமலை  ஒன்றிய குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. சக்திவேல் தலைமை வகித்தார். கீழ வெளியூர் கடை வீதி யில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் தலைமை வகித்தார்.  இதில் பலர் கலந்து கொண்டனர்.

க. பரமத்தி ஒன்றியம்

க.பரமத்தி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிச்சாமி  தலைமை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

 கடவூர் ஒன்றியம்  

பாலவிடுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தி ற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனிவேலு தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெட்டியபட்டி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணாபுரம் ஒன்றியம்

பிள்ளபாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் வக்கீல் சரவணன் மற்றும் சரவணன் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

எரவாஞ்சேரி ஒன்றியம் 

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதிக்குழு சார்பாக  ஒன்றிய குழு உறுப்பினர் வீ.ராஜதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.அன்பழகன் முன்னிலையில் எரவாஞ்சேரி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.சந்திரகாசன்,வீ.தீனதயாளன், மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

தரங்கம்பாடி

அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டங்கள் தரங்கம்பாடி வட்டத்தில் 16 இடங்களில் நடை பெற்றது.  நெடுவாசல்,திருவிடைக்கழி பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.இராசையன் தலைமை வகித்தார்.அபிஷேகக்கட்டளையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமை வகித்தார். டி.மணல்மேட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்றது.ஆணைக்கோயிலில் மாவட்டக்குழுஉறுப்பினர் ஏ.ரவிச் சந்திரன் தலைமையிலும் பூந்தாழை,கீழையூர்,ஆக்கூர் ஆகிய பகுதியில் வட்டக்குழு உறுப்பினர் கே.பி மார்க்ஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

திருச்சிராப்பள்ளி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அபிஷேகபுரம் கிளை செயலா ளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். அபிஷேக புரம் பகுதிக்குழு சார்பில் பஞ்சப்பூர், ராமச்சந்திராநகர், பிராட் டியூர் உள்பட 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தநல்லூர் ஒன்றியம்

தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர். புலிவலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் பாரதிதாசன் தலைமை வகித்தார். இதில்மாவட்ட செயற்குழு உறுப்பி னர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பராய்த்துறை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போதாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் வினோத் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  திருவெறும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் தஸ்தகீர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் சிறப்பு ரையாற்றினார். நிர்வாகிகள் தவுலத்பாண்டியன், ராதா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துவாக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, குருநாதன், கிரிஜாமேரி, விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் சுப்ர மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சி.பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பொன்மலை பகுதிக்குழு சார்பில் ரஞ்சிதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் பேசினார். இதில் பகுதிக்குழு புவனேஷ்;வரி. ராணி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் சமயபுரம் நால்ரோடு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஒன்றிய செயலாளர் கனகராஜ் பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டக்குழு சார்பில்  7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மணப்பாறை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ராஜகோபால்,, வட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் தலைமை வகித்தனர். செவலூர் நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வடக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், முத்துசாமி தலைமை வகித்தனர்.

கரட்டுப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணன், கருப்பையா ஆகியோர்  தலைமை வகித்தனர். சூளியாபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்  மறவனுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ் தலைமை வகித்தார். பாரதியார்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட குழு உறுப்பினர் சுரேஷ்; தலைமை வகித்தார். பன்னக் கொம்பு மற்றும் புத்தாநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டகுழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை கடை பிடித்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

மருங்காபுரி தாலுகாகுழு சார்பில் வட்டாட்சியர் அலுவ லகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டசெயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் முருகேசன். அண்ணாதுரை, பழனிசாமி, கல்லுப்பட்டி கிளைசெயலாளர் மல்லிகா உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். வளநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டகுழு உறுப்பினர் அழகர்சாமி தலைமை வகித்தார். பலக்குறிச்சி செயலாளர் லூக்காஸ், வெள்ளக்குளம் சாமிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாத்தையங்கார்பேட்டை 

தா.பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பிள்ளாதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். கோதுர்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். 

கோடங்கிபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், முருகேசன், காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், வீரவிஜயன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

துறையூர்

துறையூர் வட்டம் உப்புலியபுரம் ஒன்றியத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஒக்கரை, தளுகை, வைரிசெட்டிபாளையம், உப்புலியபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

;