செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தமிழகம்

img

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இணைய வேண்டிய காலம் இது

அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் க.சுவாமிநாதன் பேச்சு

தஞ்சாவூர், செப்.29- ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இணைய வேண்டிய காலம் இது என்று அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் க.சுவாமி நாதன் பேசினார். தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் துணைத்தலைவர் க.சுவாமி நாதன் நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தக் காலம் இந்திய தொழிலாளர்களுக்கும் மத்தியதர ஊழியர்களுக்கும் சவால் நிறைந்த காலகட்டமாகும். அமைப்புசாரா தொழிலா ளர்கள் தாக்கப்படுவதும், அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்படுவதும் காலம் கால மாக நடந்து வருகிறது. ஆனால் இன்று அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நிலை யும் கேள்விக்குறியதாக மாறியுள்ளது. 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைக்குமா, கிடைக்காதா என காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளத்தை தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரு பது லட்சம் முறை தரை இறங்கி பறந்தது என பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய  ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் ஊழி யர்களும் மாத சம்பளத்திற்கு அல்லாடு கிறார்கள். ஹோமி பாபாவால் உருவாக்கப் பட்ட எழுபது வருட பழமை வாய்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலைமை.  இன்றைக்கு அரசு நிறுவனங்கள் மட்டு மல்ல, தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்க முடியாத நிலைமை. மற்ற ஊழியர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தின் ஹைடெக் பொறியாளர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவை எல்லாம் எதை உணர்த்துகிறது? இந்த நெருக்கடியின் வேர்கள் எங்கு உள்ளன? அரசின் பொருளாதார பாதையில் உள் ளது. பாரபட்சமான வருமான மறு பங்கீட் டில் உள்ளது. 

பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய பென்சன் திட்டத்தை அரசு அறிவித்தது. இன்று ஓய்வு பெறு வோர்க்கு பென்ஷன் கிடைக்குமா என்ற அச்சம் உள்ளது. தனியார் நிறுவனங்க ளுக்கான, கார்ப்பரேட் முதலாளிகளுக் கான லாப வேட்டையில் தொழிலாளர் களின் ஓய்வூதியப் பணம், பங்குச்சந்தை, பணச்சந்தை, சரக்குச் சந்தை என முத லீடு செய்யப்படுகிறது. வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் உள்ள மக்களின் சேமிப்பு பணம், பங்குச் சந்தையை நோக்கி திருப்பி விடப்படுகிறது. இங்கே எல்லாம் நிதி மூல தனத்தின் சூதாட்டம் நடந்தேறி வருகின் றன. இந்த மூலதன வேட்டைக்கே ஊழியர் களின் பென்சனும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.  மக்களை, பிற உழைப்பாளிகளை தாக்குகிற அதே பொருளாதார பாதை தான் நம்மையும் தாக்குகிறது. இதை நாம் ஊழி யர்களிடம் சொல்ல வேண்டும். எல்லா உழைப்பாளிகளிடமும் சொல்ல வேண்டும். மக்களிடமும் பேச வேண்டும். இது ஒற்றுமைக்கான தருணம். எங்கெல்லாம் ஒடுக்குமுறைகள் நிகழ்கி றதோ அங்கெல்லாம் நமது கரங்களும் இணைய வேண்டிய நேரம். இதை உங்கள் சங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை யோடும், எதிர்பார்ப்போடும் மாநாட்டை நிறைவு செய்து வைக்கிறேன் என்று சுவாமி நாதன் உரையாற்றினார்.

;