ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

ஸ்டேட் வங்கி முதல் நிலை தேர்வில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் தேர்ச்சி

ஸ்டேட் வங்கி உதவியாளர் முதல் நிலை தேர்வில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற  29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கோவையில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட ஸ்டேட் வங்கி உதவியாளர் முதல் நிலை தேர்வில் இம்மையத்தில் பயின்ற 29 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் வருகிற அக்டோபர் 31ஆம்தேதி நடைபெறுகிற இறுதித் தேர்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை இணைத்து கொண்டு இம்மையத்தினை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள்.

தற்போது வங்கித் தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள்  ஒவ்வொரு ஞாயிறும் காலை நடைபெற்று வருகிறது . 

மேலும் வருகின்ற அக்டோபர்  31ஆம் தேதி சனிக்கிழமை முதல் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  காவலர் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (VAO ) தேர்வுக்கான சிறப்பு இலவச இணைய வழி பயிற்சிகளை  வகுப்புகளையும் துவக்க உள்ளது.

இம்மையத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, ரயில்வே , இன்சூரன்சு, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;