திங்கள், அக்டோபர் 26, 2020

தமிழகம்

img

10, 12 ஆம் வகுப்பு மறுதேர்வு: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு

சென்னை:
10, 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6 ஆம் தேதி தொடங்கப்படும் என்று சிஐஎஸ்சிஇ (இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் எக்ஸாம் எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.இந்த ஆண்டு (2020) ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் 99.34 விழுக்காடு தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பில் 96.84 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றனர்.இதில் கம்பார்ட்மெண்ட் பகுதியில் இருப்பவர்களுக்கான தேர்வுகள் அக்.6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது.

அக்.6 முதல் 9 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் அக்.17 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சானிடைசர் கொண்டு சென்று, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் கையுறைகளை விரும்பினால் மாணவர்கள் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ 12 ஆம் வகுப்புக் கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10 ஆம் வகுப்புத் தேர்வும் நடத்தப்ப டவில்லை.இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகள் செப்.22-ல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

;