திங்கள், அக்டோபர் 26, 2020

தமிழகம்

img

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்

சென்னை:
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவர் தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் வழக்கு விசாரணையின்போது அற்புதம்மாள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிறை விதிகளில் இருந்து விலக்களித்துப் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் 30 நாள் பரோல் வழங்குவதாகத் தெரிவித்தனர்.

;