செவ்வாய், அக்டோபர் 20, 2020

தமிழகம்

img

484 பஞ்சாயத்து சாலைகள் மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை:
தமிழகத்தில் 1268 கிலோமீட்டர் நீளமுள்ள, 484 பஞ்சாயத்து சாலைகள் மேம்பாட்டு பணிக்கு தமிழக அரசு 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.1456 கிலோமீட்டர் நீளமுள்ள பஞ்சாயத்து சாலைகள், இதர மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்படும் என்று  சட்டமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 1362 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை 1024 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த நபார்டு மற்றும் ஊரக சாலைகள் பிரிவு தலைமை பொறியாளர் முன்மொழிவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை பரிசீலித்து, 1268 கிலோமீட்டர் நீளமுள்ள 484 பஞ்சாயத்து சாலைகளை, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக எந்தெந்த பஞ்சாயத்து சாலைகள் தரம் உயர்த்தப்படுகின்றன மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களும் அரசாணையில் இடம்பெற்றுள்ளன.

;