புதன், அக்டோபர் 21, 2020

தமிழகம்

img

பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை அறிய புது வசதி...

சென்னை:
பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலையை வீடியோ அழைப்பு மூலம் அறியும் வசதியை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை கவுண்ட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இருந்தாலும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங் களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ‘ஸ்கைப்’ மூலம் வீடியோ அழைப்பு செய் யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை சென்னை மண்டல அலுவலகத்தில் ‘ஸ்கைப்’ முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இந்த ஸ்கைப் வீடியோ அழைப்பு வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது. இது அவசர விசாரணைக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 18002581800 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.இந்த தகவலை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

;