தமிழகம்

img

தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை - செங்கோட்டையன்

தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை  தொடர்ந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை. முழுமையாக கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் தற்போது  அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். 15 இடங்களில் தொடக்கப்பள்ளிகளும் 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும் என்ற தெரிவித்துள்ளார். 
 

;