செவ்வாய், அக்டோபர் 20, 2020

தமிழகம்

img

கொரோனா பணிகளுக்காக கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

தூத்துக்குடி
தமிழகதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கொரோனா தடுப்பு பணிகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,"தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள்,  மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய்  ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

;