திங்கள், நவம்பர் 30, 2020

tamilnadu

img

பட்டாசு ஆலையில் விபத்து; 5 பேர் பலி... விதிமீறல் காரணமா? காவல்துறை தீவிர விசாரணை

மதுரை/விருதுநகர்:
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியை அடுத்த எம்.செங்குளத்தில் வியாழனன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் ஐந்து பெண்கள் பலியானார்கள். மாலை ஐந்து மணி நிலவரப்படி மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான எரிச்சநத்தம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான ‘ராஜேஸ் வரி’ என்ற பெரிய பட்டாசு ஆலை ஒன்றுஇயங்கி வருகிறது. இந்த ஆலையைசிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூரைச்சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந் தன.இந்த நிலையில், வெள்ளியன்று (அக்.23) பட்டாசுகளுக்கு திரி வைக்கும்போது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில்உள்ள இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பேரையூர் அருகே உள்ளபாறைபட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி வேல்தாய் (45), சிலார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி(40), காடனேரியைச் கருப்பையா மனைவிஅய்யம்மாள் (65), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த பாண்டி மனைவி சுருளியம்மாள் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள்
ஆமத்தூர் வெங்கேடஸ்வரபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (35),காடநேரி தெற்குதெருவைச் சேர்ந்த லெட்சுமி, காடநேரி வடக்குத் தெருவைச்சேர்ந்த முத்துச்சாமி மகள் மகாலெட்சுமி.இதில் மகாலெட்சுமி 80 சதவீத தீக்காயத்துடனும், மற்ற இருவரும் 50 சதவீத தீக்காயத்துடனும் மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

ஆலையில் விதிமீறல்...?
இந்த ஆலை உரிமம் பெற்றிருந்ததாகக் கூறப்பட்டாலும் பேன்சிரக பட்டாசுகள் விதிமுறைகளை மீறி வெட்ட வெளியில், மரத்தடியில் தயார் செய்யப்பட்டுவருகின்றன. பட்டாசிற்கு தேவையானரசாயனக் கலவை (மணி மருந்து) அதிகளவில் வெளியில் வைத்திருந்தததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆலையின் உரிமையாளர் எரிச்சநத்தம் அருகே உள்ள இ,புதுப்பட்டியைச் சேர்ந்தவர். ஆனால், விதிமுறைகளை மீறி ஆமத்தூரைச் சேர்ந்த அழகர்சாமிக்கு ஒப்பந்தமுறையில் விடப்பட்டுள்ளது என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அழகர்சாமியின் மனைவி ஆமத்தூர் ஊராட்சித் மன்றத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ====நமது நிருபர்கள்====

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக: சிபிஎம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற் பட்டுள்ளது. இதனால் ஆலையில் உள்ள2 அறைகள் இடிந்து தரைமட்டமாகி தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்துள்ளனர். மூன்று பேர் பலத்தக் காயமடைந்துள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற் படுத்துகிறது.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனதுஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

பட்டாசு ஆலைகளில் இதுபோன்றவெடிவிபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுவதும், இதற்கு பொறுப்பாக உள்ள அரசுத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இப்படிப் பட்ட இழப்புகளை தொடர்ந்து சந்திக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற் சாலைகளில் வெடி விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிசெய்திட வேண்டும்.நடைபெற்ற வெடிவிபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குதலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும், படுகாயமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளித்திடுவதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.மேலும், தீபாவாளி மற்றும் பண்டிகை காலம் என்பதால் பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அரசின் விதிமுறைகளை கறாராக அமல்படுத்துவதற்கும், வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;