செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தமிழகம்

img

சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா...

மதுரை 
நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை மரண  விவகாரத்தில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தொடக்கத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில்,  சிபிஐ-க்கு மாற்றபட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 10 பேர்களில் 8 பேரை தனிக்காவலில் எடுத்து சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சிபிஐ விசாரித்து வருகிறது. காவலர்கள் செல்லத்துரை, சாமத்துனர, வெயிலு முத்து ஆகிய மூன்று பேரை சிபிஐ விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிஐ விசாரணை அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

;