புதன், அக்டோபர் 28, 2020

தமிழகம்

img

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் தொடர் துரோகம்

மதுரை:
ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டுமென மத்திய, மாநில அரசுகளை  வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாநிலப்பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் சனிக்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-2020-21 ஆம் ஆண்டுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.100  மட்டும் விலையை உயர்த்தி பத்து சதவீதம்பிழிதிறன் உள்ள கரும்பு  டன் ஒன்றுக்கு ரூ.2,850 விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரி கரும்பு பிழிதிறன் 9.5 சதத்திற்குள்இருப்பதால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,707.50 மட்டுமேவிலை கிடைக்கும்.
சர்க்கரைக்கு ஆலை வாயில் விலை ரூ.32.50என மத்திய அரசு  நிர்ணயம் செய்துள்ளது. மொலாசஸ்  டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்திற்கு மேல்விற்கிறது. கரும்பு உபபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சர்க்கரை ஆலைகள்லாபத்தில்இயங்கிவருகின்றன. வட்டியில்லா கடன், ஏற்றுமதிசர்க்கரைக்கு மானியம் என சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்கியுள்ளது. ஆனால் கரும்புக்கான விலையை உயர்த்த மத்தியஅரசு மறுக்கிறது.

கடந்தாண்டும் கரும்புக்கு  மத்திய அரசுவிலையை உயர்த்தவில்லை. 2020-21-ஆண்டில் ஒரு கிலோ கரும்புக்கு பத்து பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில்பெரும் சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகளின் நிலை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு  ஒரு டன் கரும்புக்கு ரூ.100மட்டுமே விலையை உயர்த்தி அறிவித்துள்ளதை  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வன்மை
யாகக் கண்டிக்கிறது.

உள்நாட்டின் தேவைக்கு அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்து தரும் ஐந்து கோடி கரும்புவிவசாயிகள், ஐந்து லட்சம் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து மத்தியஅரசு கவலைப் படவில்லை. மத்திய அரசுபிழிதிறன் சதவீதத்தை அறிவிப்பது விவசாயிகளுக்கு பாதகமானது, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சாதகமானது.மாநில அரசின் பரிந்துரை விலையை எஸ்ஏபி-ஐகடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அரசுநிறுத்தி விட்டது. விவசாயிகளின் நண்பன் என்றுதன்னை கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர், கரும்புக்கு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு கொடுத்து விட்டு பணத்தை பெற விவசாயிகள் பல மாதங்கள் அலைய வேண்டியுள்ளது.நாடு முழுவதும் ரூ.16,000 கோடி கரும்பு பண பாக்கி உள்ளது .மத்திய அரசு 9.5 சதவீதம் பிழிதிறன் கரும்புடன்ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை வழங்க வேண்டும்.மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையைஎஸ்ஏவி டன் ஒன்றுக்கு  ரூ.500 வழங்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

;