புதன், அக்டோபர் 21, 2020

தலையங்கம்

img

ஆலோசனை வள்ளல்...பிரதமர் மோடி...


கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநில முதல்வர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடிகாணொலி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்புக்காக தாங்கள்செய்திருப்பது என்ன, செய்யப்போவது என்ன, அதற்கு மத்திய அரசு செய்யவேண்டியது என்ன என்று முதல்வர்கள் பேசியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கூறிவிட்டு பிரதமரிடம் முக்கியமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். தமிழகத்திற்கு அவசர கால மற்றும் மருத்துவத் திட்ட தொகுப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ.712 கோடியே 64 லட்சத்தில் 2 தவணையாக ரூ.511 கோடியே 64 லட்சம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அப்படி எனில் இன்னும் ரூ.201 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவும் லட்சணம்.

இந்நிலையில், மாநிலத்தில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த தொகுப்பு நிதியை ஏற்கனவே கேட்டபடி ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீண்டும் முதல்வர் கேட்டிருக்கிறார். அத்துடன் மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாகப்பயன்படுத்திவிட்ட நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிதியாக ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

ஆனால் பிரதமர் மோடியோ, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம்பிறமாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது என்று பாராட்டியிருக்கிறார். இங்குஎத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது தமிழக மக்களுக்குத் தானே தெரியும்! கூடுதல் நிதியா வேண்டும், உங்களிடம் இருக்கும்பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 50 சதவீதத்தை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் ரொம்பத் தாராளம் காட்டியிருக்கிறார். 

மாநில பேரிடர் நிதியை முழுமையாகப் பயன்படுத்திவிட்டோம் என்று கூறிய தமிழக முதல்வருக்கு நிதி உதவிபற்றி ஏதும் கூறாமல் இன்னுமொரு பாராட்டும் வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. மத்திய அரசின் ஆயுஷ் சஞ்சீவினிசெயலியை தமிழக அரசு சிறப்பாகப் பயன்படுத்திதொலை மருத்துவத் துறையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் அனுபவம் நாட்டுக்கே உதாரணமாகத் திகழ்கிறது என்றும் முதல்வர் ‘முதுகில்’ தட்டிக் கொடுத்திருக்கிறார் மோடி.

பேச்சோடு பேச்சாக தமிழக முதல்வர், பிரதமர்மோடியை, தற்போதைய விவசாய மசோதாக் களுக்காக நன்றியும் பாராட்டும் கூறி எஜமானவிசுவாசத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் நெல் கொள்முதலுக்காக வழங்க வேண்டிய ரூ.1321கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கெல்லாமா மசிந்து விடுவார் மோடி. நீங்களும் பாராட்டினீர்கள், நானும் பாராட்டுகிறேன் என்றுவாய்ச்சொல் வீரரான பிரதமர் மோடி ஆலோசனைகளை தாராளமாக அள்ளி வழங்கிவிட் டார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கேட்டால்கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஏற்கெனவே கூறியவர்கள்தானே!

;