புதன், அக்டோபர் 21, 2020

தலையங்கம்

img

புதிய இறக்குமதி சட்டங்கள் ஆபத்தானவை

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு தனது இறக்குமதி கொள்கையில் கட்டண வீத ஒதுக்கீடு (Tariff rate quota) அடிப்ப டையில் செய்துள்ள மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் நமது கால்நடை மற்றும் மக்காச் சோள விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டது. கடந்த ஜூன் 23 அன்று மத்திய நிதித்துறை சார்பில் இறக்கு மதி செய்யப்படும் பால் பவுடர் பால் துகள்கள் (Qranules) மற்றும் பிற திட பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிப்புகளில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகைய நிலைப்பாடு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து முன்பு நடை முறையில் இருந்து இந்த வருட பிப்ரவரி மாதத்தில் தான் விலக்கப்பட்டது. தற்போது மீண்டும் இதனை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

தற்போது நமது நாடு முழுவதும் கொரோ னா நோய் பரவல் காரணமாக கால்நடை விவ சாயிகள் போதிய அளவு நுகர்வு இல்லாமலும், சந்தைகளில் பண சுழற்சி இல்லாத காரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் பால் பொருட்கள் இறக்குமதி அவர்களை பொருளாதாரரீதியாக கடுமையாக பாதிக்கவே செய்யும். தற்போது பால் பொருட்களை நேரடியாக தனியார் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்றாலும் தற்போது தேசிய பால் வளர்ச்சி வாரியம் வாயிலாக இறக்கு மதிகள் அனுமதிக்கப்பட்டால் பால் சந்தைகளில் இதனால் நிச்சயம் விலை வீழ்ச்சிகள் ஏற்படும்.

அரசின் இறக்குமதி முடிவுகள் பால் மதிப்பு கூட்டு நிறுவனங்களுக்கு லாபம் தரும் என்றாலும் தற்போது நுகர்வு இல்லாத சூழலில் அவர்களுக்கு லாபம் தராது. இந்திய சந்தைகளில் பால் விலை உயர்வு இதனால் தடுக்கப்படும் என்றாலும் இதனால் நமது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கால்நடை விவசாயிகளின் நலன்கள் மற்றும் வாழ்வுரி மைகளை பாதிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு புதிய கால்நடை பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கி இருந்தால் கோடிக்கணக்கான கால்நடை விவசாயிகளுக்கு பயன் தருவதாகவும், பால் பொருட்கள் விலை சந்தையில் வீழ்ச்சி அடைய செய்யாமலும் இருக்கும்.

அதேபோல குறைந்தளவு வரி விதிப்புகளில் சுமார் 5 லட்சம் டன் வரை மக்காச்சோள இறக்கு மதி காரணமாக இந்திய சந்தைகளில் மக்காச் சோள விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வரு கிறது. கடந்த ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பரப்பளவு 5.18 லட்சம் ஹெக்டேர் என்ற அளவை கடந்து இரு மடங்காக உயர்ந்து 10.48 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உயர்ந் துள்ள நிலையில், பெருவாரியாக மக்காச்சோ ளம் சாகுபடி செய்த பல கோடி விவசாய குடும்பங் கள் கடுமையாக நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்து. எனவே இத்தகைய இறக்குமதி முடிவுகளை அரசு கைவிடவேண்டும். 

;