புதன், அக்டோபர் 21, 2020

தலையங்கம்

img

காவல் நிலைய அதிகாரிகளை உடனே கைது செய்க!

தமிழக காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக ஒரு வழக்கில் காவல் நிலையத்தில்  இருந்த எல்லோரையும் இடம்மாற்றி விட்டு புதிய வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சர்ச்சைக்குரிய அந்த காவல்நிலையம் வருவாய்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சடலமாகவே உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டனர்.  இந்த பிரச்சனை பூதாகர மாகி அந்த காவல்நிலைய ஏட்டு முதல் மாவட்ட எஸ்.பி வரை இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மாஜிஸ்திரேட் விசாரணைக்கான வழக்காகத் தான் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை பிறப் பித்துள்ளது. தந்தை மகன் கொடூரமாக தாக்கப் பட்ட  சம்பவத்தை  மர்ம மரணம் என்றுதான் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 176 என்பது மர்ம மரணத்தைத்தான் குறிக்கிறது.  

காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக் கையே பதிவு செய்யவில்லை. குற்றம் செய்தவர் கள் மீது சட்டம் 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அதையும்  செய்யவில்லை.  சம்பவத்தின்போது உடன் இருந்த காவலர்கள், ‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ ஆகியோர் மீதும் இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தி ருக்க வேண்டும். 

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் “தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளன. எனவே சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது” என்றும்  ஒரு நொடி கூட வீணாகக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

 நீதிபதிகள் குறிப்பிட்டதன் அடிப்படையில் இருவரது உடலிலும் அதிக காயங்கள் இருக்கி றது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்படி யானால் மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறந்ததாக பொய் சொன்ன காவல்துறை அதி காரிகள், சிறையில் அடைக்கும் நிலையில் இரு வரது உடல்நிலையும் உள்ளது என சொன்ன மருத்துவர்  உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும்.

இந்த நிலையில் இந்த வழக்கை அவசர அவ சரமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது பல சந்தேகங் களை எழுப்புகிறது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, குஜராத் வன்முறை தொடர்பான  வழக்குகள் வெளிமாநில அதிகாரி களிடம் ஒப்படைத்து விசாரணை மேற் கொண்டதால்தான், குற்றவாளிகள் சிலரேனும்  தண்டிக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் தாமதம் கூடாது.  குற்றிமிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீதான பல்வேறு மனித உரிமைமீறல் தொடர்பான புகார்களையும் விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

;