வியாழன், அக்டோபர் 22, 2020

தேசம்

img

தீக்கதிர் ஒருவரிச் செய்திகள்...

செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் புதைந்து போன மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                                ***************

தமிழகத்துக்கான ரூ.12,250 கோடிஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

                                                ***************

புதுச்சேரியில் ரோடியர் மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்களும் புதன்கிழமையன்று முதல் மூடப்படுவதாக புதுவை அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

                                                ***************

வேலூர் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

                                                ***************

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள னர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 29 பேர் பலியாகினர்.

                                                ***************

இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை காகிதப் பயன்பாடு இன்றி மின்னணு முறையில் மேற்கொள்வதற்காக, ஐபி இ-நோட் என்றமின்னணு சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

                                                ***************

கொரோனா வைரஸ், மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்கஉத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்தத்தேர்வை எழுத முடியாமல் போனவர் களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

;