வியாழன், அக்டோபர் 22, 2020

தேசம்

img

பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்.... மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு

சண்டிகர்:
பஞ்சாப் விவசாயிகள், தங்கள் ரயில் மறியல் போராட்டத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ளார்கள். இதனால் மாநிலம் முழுதும் ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சனிக்கிழமையன்று பலஇடங்களில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாடாளு மன்றத்தில் நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் புறக்கணித்துவிட்டு, வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தை மேலும் மூன்று நாட்களுக்குத் தொடர்கிறார்கள். இதனால் மாநிலம்முழுதும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதும் தொடர்கிறது. முன்னதாக விவசாயி கள் செப்டம்பர் 24 முதல்26 வரை ரயில் மறியல்போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். இப்போது அதனை செப்டம்பர் 29 வரை நீட்டித்திருக்கிறார்கள்.   ரயில் தண்டவாளத்தில் அமர்ந்துள்ள விவசாயி களும் அவர்தம் குடும்பத்தினரும் பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். வேளாண் சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று வர்ணித்த அவர்கள், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அமிர்தசரஸில் போராடிய விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில் சட்டைகளையும், குர்தாக்களையும் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டங் களில் விவசாயிகளுடன், பெண்களும், குழந்தை களும் ஏராளமாகப்பங்கேற்ற னர்.  (ந.நி.)

;