செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தேசம்

img

கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.4.07 கோடி....

திருவனந்தபுரம்:
கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மூன்றாவது கட்டமாக ரூ.71,73,000 உடன்இதுவரை ரூ. 4,07,23,000 வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக நிதியை செவ்வாயன்று சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஜோஸ்.டி.ஆப்ரஹாம், மாநில இணை செயலாளர் எஸ்.பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்.ஏற்கனவே சங்கத்தின் சார்பில் இரண்டுகட்டங்களாக வழங்கிய ரூ.3,35,50,000 உடன்சேர்த்து ரூ. 4,07,23000 வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநில பொதுச் செயலளார் எஸ்.எஸ்.அனில் தெரிவித்தார். இந்த நிதியில் பங்களிப்பு செய்த வங்கி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு சங்கத்தின் சார்பில் அவர் நன்றி தெரிவித்தார்.

;